×

ஜடேஜா 2000/200!

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 200 விக்கெட் மற்றும் 2000 ரன் எடுத்த 2வது இந்திய வீரர் என்ற பெருமை ஆல் ரவுண்டர் ஜடேஜாவுக்கு கிடைத்துள்ளது. வங்கதேச வீரர் ஷமிம் உசேன் விக்கெட்டை நேற்று வீழ்த்தியபோது அவர் இந்த சாதனையை வசப்படுத்தினார். இந்த போட்டிக்கு முன் ஜடேஜா 2578 ரன் மற்றும் 199 விக்கெட் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, இந்திய அணி முன்னாள் கேப்டன் கபில் தேவ் இந்த சாதனையை நிகழ்த்தி இருந்தார் (3783 ரன் மற்றும் 253 விக்கெட்). ஒருநாள் போட்டிகளில் 200 விக்கெட் வீழ்த்தும் 7வது இந்திய பவுலர் ஜடேஜா ஆவார். இந்த வரிசையில் அனில் கும்ப்ளே (337), ஜவகல் ஸ்ரீநாத் (315), அஜித் அகர்கர் (288), ஜாகீர் கான் (282), ஹர்பஜன் சிங் (269), கபில் தேவ் (253) முன்னிலை வகிக்கின்றனர்.

The post ஜடேஜா 2000/200! appeared first on Dinakaran.

Tags : Jadeja ,Dinakaran ,
× RELATED 28 ரன் வித்தியாசத்தில் பஞ்சாப்பை...